×

சிட்கோ நிறுவனம் சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து போராட்டம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெரிய தொழில் நிறுவனங்கள் உள்ளன. இதில், சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தினந்தோறும் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், இந்த சிப்காட் நிறுவனத்தில் உள்ள சிறு தொழில் வளர்ச்சி நிறுவன (சிட்கோ), 58 தொழிற்சாலைகளில், ‛சிக்மா’ என்ற பெயரில் இயங்கி வரும் அதன் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் நேற்று வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்பட்டது. இதில், சிட்கோ சங்க தலைவர் சுப்பிரமணி தலையைில், தொழில் முனைவோர் அனைவரும் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், தமிழக அரசின் மின் கட்டண உயர்வால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க வேண்டும், உயர்த்திய மின் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

The post சிட்கோ நிறுவனம் சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து போராட்டம் appeared first on Dinakaran.

Tags : CITCO ,Kummidipoondi ,Kummidipoondi Chipkot Industrial Estate ,Dinakaran ,
× RELATED கஞ்சா என கூறி மாட்டு சாணம் விற்பனை:...